தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் அக்கட்சியின் பயணத்தையும், விஜயின் செயல்பாடுகளையும் பார்க்கலாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், முழு நேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அந்தவகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்டார். கட்சி தொடங்குவற்கு ஒருநாள் முன்னரே நியூஸ் 18 தொலைக்காட்சி அதை செய்தியாக வெளியிட்டது. தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என விஜய் பெயரிட்டு உறுப்பினர் சேர்க்கைக்கான அறிவிப்பையும் வெளியிட்டார். கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டிய விஜய், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஒரு புறம் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அவரின் கொள்கை என்னவென்று அரசியல் விமர்சகர்களும் அரசியல் கட்சியினரும் எழுப்பி வந்தனர். ஆனால் கட்சியின் கொள்கையை மாநாட்டில் வெளியிடவே விஜய் திட்டமிட்டார். advertisement