நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை ''எடிட் செய்து கொடுத்ததே நான்தான்'' என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில், சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீமான், 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்?