News Image

IND vs ENG: கோலி வருகையால் ஸ்ரேயாஸ் நீக்கம்? - ஆடுகளம் யாருக்கு சாதகம்?

By Admin

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் இன்று பிற்பகல் தொடங்கும் 2வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணி களமிறங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது, இந்த ஆட்டத்தில் வென்றால் ஒருநாள் தொடரை வெல்லும். ஒருநாள் தொடரை வெல்வது முக்கியமல்ல, இப்போதுள்ள நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கு வீரர்களை எவ்வாறு தயாராக்குவது என்பதும், வாய்ப்புகளை வழங்கி பரிசோதிப்பதும்தான் முக்கியம் என இந்திய அணி கருதுகிறது. அர்ஷ்தீப் சிங் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப்பின் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை, வருண் சக்ரவர்த்தியை ஒருநாள் போட்டிக்கு பந்துவீசிப் பார்க்கவில்லை, அப்படியிருக்கும்போது, புதிய வாய்ப்புகளை இந்திய அணி தேடுதல் அவசியமாகும்.