News Image

305 ரன் இலக்கை ஊதித் தள்ளிய இந்தியா: இங்கிலாந்தை சிதறடித்து புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா

By Admin

ரோஹித் சர்மாவின் அற்புதமான சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று பகலிரவாக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 305 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 33 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 10-வது சர்வதேச தொடரை வென்றுள்ளது. ரோஹித் சர்மா அதிரடி சதத்தால் மிகப்பெரிய இலக்கை இந்தியா எளிதில் எட்டியது எப்படி?