புதிய இணைப்பு யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமானது. யாழ். மாவட்ட செயலகத்தில் குறித்த கூட்டம் இன்று (31.01.2025) ஆரம்பமானது. குறித்த நிகழ்விற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இதேவேளை, மேலும் பல பொதுக் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி ஆராய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.