தமிழீழ விடுதலைப் புலிகளால் மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) உயிராபத்து இருப்பதால் அவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க (S. B. Dissanayake) தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளதுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் (Colombo) நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.