News Image

ராமர் கோயில் திறந்து ஓராண்டு நிறைவு - மாறி வரும் அயோத்தியின் பேசப்படாத மறுபக்கம்

By Admin

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அயோத்தி நகரம் மாறத் தொடங்கியுள்ளது. உத்தரபிரதேசத்தை ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்றும் யோகி ஆதித்யநாத் அரசின் லட்சிய திட்டத்தில் அயோத்தி மிகவும் முக்கியமானது. இதனால் நகரில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அயோத்திக்கு தினமும் ஒன்றரை முதல் இரண்டு லட்சம் பக்தர்கள் வருகின்றனர் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஆன்மீகம், சுற்றுலாவுக்கு நடுவே அந்த நகரின் பேசப்படாத மறுபக்கத்தை பார்க்கலாம்.