News Image

அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வியால் தேசிய அரசியலில் ராகுல் காந்தி பலனடைவாரா?

By Admin

2014 மக்களவைத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் வாரணாசியில் நரேந்திர மோதிக்கு எதிராக போட்டியிட்டு 3 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அந்த நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு இரண்டு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. இப்போது ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆன நிலையில், கேஜ்ரிவால் புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். நரேந்திர மோதிக்கு எதிராக போட்டியிட்டு கேஜ்ரிவால் முதன் முதலாக தோல்வியை சந்தித்தார். இரண்டாவது தோல்வியை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பர்வேஷ் வர்மாவிடமிருந்து தற்போது எதிர்கொண்டுள்ளார்.