News Image

நடிகர் பாலகிருஷ்ணா மீது மேடையில் நடிகையுடன் அநாகரிகம் – சர்ச்சை!

By Admin

நடிகர் பாலகிருஷ்ணா தனது சக நட்சத்திரமான ஊர்வசி ராவ்டெலாவிடம் நடந்துகொண்ட விதத்தை பலரும் பார்த்திருப்பார்கள். "அண்மையில் 'டாகு மகாராஜ்' திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அங்கே 'டபிடி டபிடி' பாடலுக்கு ஊர்வசி ராவ்டெலாவுடன் இணைந்து பாலகிருஷ்ணா நடனமாடினார். அங்கே அவர் இறுதியில் ஒரு செயலைச் செய்தார். அதை இங்கே விளக்க நான் விரும்பவில்லை. அந்த காட்சியையும் உங்களுக்கு காட்ட நான் விரும்பவில்லை. அது ஆபாசமானது" என பெண்ணிய செயல்பாட்டாளர்கள் பலர் கோபத்தில் உள்ளனர். இதுபோன்ற ஆட்சேபகரமான நடவடிக்கைகள் பாலகிருஷ்ணாவுக்கு புதிதல்ல. தரக்குறைவான பேச்சுகள் மற்றும் பெண்களிடம் நடந்துகொண்ட விதத்திற்காக அவர் பலமுறை செய்திகளில் இடம்பெற்றுள்ளார்."இது மானக்கேடானது. பொதுவெளியில் இதுபோன்ற செய்கைகள் பெண்ணின் கண்ணியத்தை குலைப்பவை. இது சட்டப்படி குற்றமுமாகும். அதுமட்டுமல்ல, இது முதல் முறை சம்பவம் அல்ல, ராதிக ஆப்தேவுக்கு பிறகு இதுபோல் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பழைய பிரபுத்துவ முறையின் ஆண்களின் ஆணவத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இது பெண்கள் குறித்து எவ்விதமான சமிக்ஞைகளை பெண்களை நோக்கி அனுப்புகிறது என்பது குறித்து திரைத்துறை சிந்திக்க வேண்டும்," என்கிறார் பூமிகா பத்திரிகை மற்றும் பூமிகா கலெக்டிவ் அமைப்பின் செயல்பாட்டாளர் கொண்டவீட்டி சத்தியவதி.